இந்துக்களின் மத நம்பிக்கைகளை கேலியும், கிண்டலும் செய்வார்



http://pasumaithagavalthalamvimarsanam.blogspot.in/

      தி.மு.க வின் அரசியல் வேசிதனம்......! ஏற்காடு தொகுதியில் நடைபெறவிருக்கிற, சட்டசபை இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளரை ஆதரிக்க வேண்டி, பா.ஜ., உட்பட கட்சிகளுக்கு ...கடிதம் எழுதியிருக்கிறார் கருணாநிதி. சில நாட்களுக்கு முன் தான், ஸ்டாலின், 'லோக்சபாத் தேர்தலில், தி.மு.க., தனித்து நின்றே, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்' என, மார்தட்டியிருந்தார். இப்போது, கருணாநிதி, ஒரு சட்டசபைத் தொகுதியில் நிற்பதற்கே, 20க்கும் மேற்பட்ட கட்சிகளிடம், ஆதரவு கேட்கிறார். தமிழகத்தில், தி.மு.க., நசித்துப் போய் விட்டது என்பதற்கு, கருணாநிதியின், இந்த வேண்டுகோள் கடிதமே ஆதாரம். இதில்,

      முக்கியமான விஷயம் என்னவெனில், பா.ஜ.,விடம், ஆதரவு கோரியிருப்பது தான். 1999 - 2004ல், வாஜ்பாய் பிரதமராயிருந்த போது, அவரது அமைச்சரவையில், 54 மாதங்கள், தி.மு.க., அங்கம் வகித்தது. கருணாநிதியின் மருமகன், மாறன், கோமாவில் இருந்த போது கூட, அவரது அமைச்சர் பதவியை, வேறு ஒருவருக்கும் மாற்றி தராமல், அவர் அமைச்சராகவே இயற்கை எய்த, வழி செய்து கொடுத்தார் வாஜ்பாய். ஆனால், மாறனின் மறைவிற்குப் பின், அந்த இலாகாவை, தன் கட்சியில் இருக்கும் திறமை வாய்ந்த, தலைவர் யாருக்கும் கொடுக்காமல், தயாநிதிக்கு கொடுக்க வலியுறுத்தினார்.

     தகுதியின் அடிப்படையில், அக்கோரிக்கையை, வாஜ்பாய் நிராகரிக்க, உடனே கருணாநிதி, பா.ஜ., கூட்டணியே விட்டு வெளியேறி, சோனியாவோடு கூட்டு சேர்ந்தார்.

     அன்றிலிருந்து, பா.ஜ.,வை, மதவாதக்கட்சி, வகுப்புவாதக் கட்சி என்றெல்லாம், வசைபாடி கொண்டிருந்த கருணாநிதி, இன்று, அதே பா.ஜ.,விடம், ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்திருக்கிறார். ஏன்? சில மாதங்களுக்கு முன், சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டிற்கு வகை செய்யும் மசோதாவை, ஐ.மு.கூ., அரசு கொண்டு வந்த போது, வாயளவில், தான் அதை எதிர்ப்பதாக கூறி, செயலளவில், பார்லிமென்டில், தன் கட்சி எம்.பி.,க்களை மசோதாவிற்கு ஆதரவாக ஓட்டளிக்க வைத்தார். அது பற்றிக் கேட்டபோது, 'மசோதா தோற்கடிக்கப்பட்டால், ஐ.மு.கூ., அரசு கவிழ்ந்து விடும்; மதவாத பா.ஜ., ஆட்சிக்கு வந்து விடக் கூடாது' என்று கூறினார். எக்காரணம் கொண்டும், பா.ஜ., ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்று கவலைப்பட்ட கருணாநிதி, இன்று, அதே பா.ஜ.,விடம், தன் கட்சி வெற்றி பெற ஆதரவு கோருகிறார். ஏன்? 'சேது சமுத்திரத் திட்டத்தை கைவிட்டால், நாங்கள் காங்கிரசை கைவிட்டு விடுவோம்' என, சில வாரங்களுக்கு முன், காங்கிரசை எச்சரித்த கருணாநிதி, இன்று, ராமர் பாலத்தை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக அறிவித்திருக்கிற, பா.ஜ.,வின் கரங்களைப் பற்றிக்கொள்ளத் துடிக்கிறார். ஏன்? பொதுவாக ஜனாதிபதி, கவர்னர், பிரதமர், மாநில முதல்வர்கள், கட்சித்தலைவர்கள் போன்றோர் அனைத்து மதத்தினரின் சிறப்பு நாட்கள் மற்றும் பண்டிகையின் போதும், மக்களுக்கு வாழ்த்து சொல்வது வழக்கம்.
          ஆனால், கருணாநிதி, சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வார். பக்ரீத் �பண்டிகை �வாழ்த்துக்கள் சொல்கிறார் இந்துகளின் பண்டிகைகளின் போது, வாழ்த்து சொல்லமாட்டார்.

        இந்துக்களின் மத நம்பிக்கைகளை கேலியும், கிண்டலும் செய்வார். ஆனால், தற்போது, பா.ஜ.,வின் உதவியைக் கேட்கிறார். ஏன்? விஷயம், ஏற்காடு தொகுதி பற்றியது மட்டுமல்ல, நாடு முழுக்க சுழன்றடிக்கும், மோடி என்ற சூறாவளியைப் பார்த்து தான். அடுத்த தேர்தலில், மோடியே பிரதமராவார் என, பெரும்பாலானோர், உறுதியாக நம்புகின்றனர். அதனால், எப்படியாவது மீண்டும் பா.ஜ.,வோடு கூட்டணியில் இணைய, கருணாநிதி ஆசைப்படுகிறார். அதற்காகத் தான், ஏற்காட்டில் தூண்டில் போட்டிருக்கிறார். 'சோழியன் குடுமி, சும்மா ஆடாது' என்றொரு பழமொழி உண்டே... அது தான் இது!