உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவும், சீனாவும்


     ந்திய தொழில் நிறுவனங்கள் சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று சீனப் பிரதமர் லி கெகியாங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   டெல்லியில் இந்திய தொழிலக கூட்டமைப்பு கூட்டத்தில் உரையாற்றிய அவர், தெற்காசிய வளர்ச்சிக்கு இரு நாடுகளில் அமைதி நிலவ வேண்டியது அவசியம் என்று கூறினார். உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவும், சீனாவும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்ட லி கெகியாங், இந்தியப் பொருட்களை சீனச் சந்தையில் விற்பனைக்கு வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
   மிக அதிக வர்த்தக வாய்ப்புள்ள உலகின் மிகப் பெரிய சந்தைகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளது என்றும் சீனப் பிரதமர் கூறினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்ற சீனா தயாராக உள்ளதாகவும் லி கெகியாங் உறுதி படத் தெரிவித்தார்.