மத்திய அரசின் 'பயனாளிகளுக்கு நேரடியாக பணம் கொடுக்கும் திட்டம்' இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. 
               அரசியல் களத்தில் நடக்கும் மோதல்கள் தாண்டி, அரசு நேரடியாக வங்கி கணக்கில் பணம் போடுவதை சமூக நோக்கர்கள், பொருளாதார ஆய்வாளர்கள் எதிர்க்கிறார்கள்.
     மானிய தொகையை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் இந்த திட்டம் மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகப்படுத்தும் என்ற வாதத்தை காங்கிரஸ் முன்வைக்கிறது. ஆனால் இந்த திட்டம், பொது விநியோகத்தை முற்றிலும் முடக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது என்கிறார் பொருளாதார ஆய்வாளர் வெங்கடேஷ் ஆத்ரேயா. இந்த திட்டத்தை கொண்டுவந்துவிட்டால், அரசு ரேசன் கடைகளை நடத்த வேண்டியதில்லை, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டியதில்லை என்ற எண்ணமும் பின்னணியில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. மக்களுக்கு தேவையான மானியம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது அவர்கள் தேவையை அவர்கள் நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்று அரசு சொல்லக்கூடும். உணவு உற்பத்தி குறைந்து வரும் வேளையில், இதில் பொறுப்பை தட்டிக்கழிக்க இது உதவலாம் என்றும் சொல்லப்படுகிறது.
பாமரமக்களுக்கு பணமான கொடுப்பது அவர்களின் குடும்பங்களுக்கு நல்லதில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதாவது பணம் எதுவாக வேண்டுமாலும் மாறலாம். ஆனால் ரேசன் கடையில் போடப்படும் அரிசியும் பருப்பும் மாறாது. அது மக்களுக்கு பயனுள்ள மானியமாக இருக்கும். ரேசன் கடைகளில் மானியத்தில் உணவு பொருட்கள் வழங்குவதுதான் சரியான முறை என்ற வாதம் சரியென்றுபடுகிறது. வெளிநாடுகளில் இந்த திட்டம் அமலில் இருக்கிறது என்று அரசு சொல்கிறது. அங்கு அரசிடம் இருந்து உதவி பெறுவதை அவமானமாக கருதப்படுகிறது. ஆனால் இங்கு அனைத்தும் இலவசமாக கிடைக்காதா என்ற மோசமான எதிர்பார்ப்பை அரசியல்வாதிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.
ஜப்பானிய பழமொழிதான் நியாபகத்திற்கு வருகிறது. "பசியால் வாடுபவனுக்கு ஒருவேளை உணவு கொடுப்பதைவிட, மீன் பிடிக்க கற்றுக்கொடு....!!"
-பொன் மகாலிங்கம்