மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது : முதல்வர் குற்றச்சாட்டு

           தமிழகத்தின் பிரச்னைகள் தீர்ப்பதில் மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழக தொழில்துறை அமைச்சரின் மகன் திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா : தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து பிரதமருக்கு இது வரை பல முறை கடிதங்கள் எழுதியிருக்கிறேன், ஆனால் கடிதம் கிடைக்கப் பெற்றதற்கான அத்தாட்சிக்கான பதில் கடிதம் மட்டுமே வந்திருக்கிறதே தவிர பிரதமர் ஒரு முறை கூட தமிழக பிரச்னைகளை தீர்ப்பதற்கான உத்தரவாதத்தை தரவில்லை என்று கூறவில்லை.
தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கோரி எழுதப்பட்ட கடிதம், காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் குறித்து எழுதப்பட்ட கடிதம் என எந்த கடிதத்திற்கும் பதில் கடிதம் , நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார்.