சிதம்பரத்தை படம் பிடித்தவர் கைது

   சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை செல்போனில் புகைப்படம் எடுத்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தீவிரவாத கும்பலை சேர்ந்தவராக , உளவாளியா என்ற கோணத்தில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், டெல்லி செல்வதற்காக செவ்வாய்கிழமை சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் தனது செல்பேசியில் , சிதம்பரத்தை படம் பிடித்துள்ளார். அவரை விசாரித்த போது, கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அமீர் என்பது தெரியவந்தது. அவர் துபாய்க்கு செல்ல இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வீட்டில் நேற்றிரவு ஆஜர்படுத்தப்பட்ட அமீரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
   -இணைய செய்தியாளர் - G.S.குரு