பொது விவாதத்திற்கு தயாரா? கெஜ்ரிவால் சவால்

   ஊழல் புகார்கள் தொடர்பாக பொது விவாதத்திற்கு தயாரா என பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், பிரதமர், சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் பொது விவாதத்திற்கு முன்வந்து, தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் தர முன்வர வேண்டும் என்றார். அதேநேரத்தில், ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற தங்களது அமைப்பு உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முழு விளக்கம் தர தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.  

                                                             -இணைய செய்தியாளர் - G.S.குரு