ஹரியானா முதல்வர் வீடு முற்றுகையிட முயன்ற பலர் கைது

      டெல்லியில், ஹரியானா முதலமைச்சர் பூபேந்தர் சிங் ஹுடாவின் இல்லம் இன்று முற்றுகையிடப்பட்டது.
ஊழலுக்கு எதிரான அமைப்பினர் இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு ஹரியானாவில் நிலம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
தடுப்புகளை மீறி முற்றுகையிட முயன்றவர்களை, போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.